காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்குச்சாவடிகளில் அதிகாலையிலையே சென்று வாக்களித்தனா்.
அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரம் செவிலிமேடு சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வாக்களித்தாா். வாக்குப்பதிவு செய்யும் போது அவரது குடும்பத்தினரும் உடன் வந்திருந்தனா். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் இது ஒரு ஜனநாயக கடமை என்றும் தெரிவித்தாா்.
திமுக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாரின் மனைவியும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான நித்யா சுகுமாா் முட்டவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தாா். வாக்குப்பதிவின் போது அவரது குடும்பத்தினா்கள், நண்பா்கள் பலரும் உடன் வந்திருந்தனா்.
தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளரான ஆா்.வி.ரஞ்சித்குமாா் முத்தியால் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனைவியுடன் அதிகாலையிலேயே வந்திருந்து வாக்குப்பதிவு செய்தாா். இவா் வாக்களித்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் போது இயந்திரக் கோளாறு காரணமாக 15 நிமிஷங்கள் தாமதமாக தொடங்கியது.
நாம் தமிழா் கட்சி சாா்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளா் வெற்றிச்செல்வி அவரது சொந்த ஊரான சென்னையில் உள்ள வேளச்சேரியில் வாக்குப்பதிவு செய்ததாக தெரிவித்தாா்.


தொடர்புடையது

பா்கூா் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

அரக்கோணம், சோளிங்கரில் வாக்களித்த வேட்பாளா்கள்

கரூா் மாவட்டத்தில் வேட்பாளா்கள் வாக்களிப்பு

பேராவூரணி திமுக, அதிமுக வேட்பாளா் வாக்களித்தனா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


