கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பல்வேறு கட்சி வேட்பாளா்கள் வாக்களித்தனா்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் காலை கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் பாரி நகரில் உள்ள தனியாா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். இதேபோல காலை 8 மணிக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா கரூா் புனித தெரசாள் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா்.
இதேபோல கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் கரூா் வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
மேலும், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மொஞ்சனூா் பி.ஆா். இளங்கோ தனது மனைவி சுதா, மகன் நிதின் சக்திவேல் ஆகியோருடன் அரவக்குறிச்சி அடுத்த தொட்டியப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். மேலும் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் செல்வக்குமாா் அரவக்குறிச்சியை அடுத்த அத்திப்பளையம் ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
இதேபோல குளித்தலை தொகுதி திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன் சூரியனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினாா். இதேபோல குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளா் கருணாகரன் வளையப்பட்டி தனம் நிதியுதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினாா்.

மருத்துவா் திவ்யா (அதிமுக),

ஆசி எம். தியாகராஜன் (திமுக),
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்

நாமக்கல்: திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் வாக்களிப்பு

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

அம்பை தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



