விபத்தில் இறந்த ஏர் இந்தியா ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் மற்றும் வேலை அறிவிப்பு

மும்பையில் நேற்று நடைபெற்ற எதிர்பாரத விபத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என
விபத்தில் இறந்த ஏர் இந்தியா ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் மற்றும் வேலை அறிவிப்பு
Updated on
1 min read

மும்பையில் நேற்று நடைபெற்ற எதிர்பாரத விபத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என ஏர் இந்தியா தலைவர் அஸ்வினி லோஹானி தெரிவித்தார்.

இறந்துபோன ஊழியர் ரவி சுப்பிரமணியனின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும். மேலும், காலை 11 மணிக்கு அனைத்து ஏர் இந்தியா அலுவலகத்திலும் சுப்பிரமணியன் மறைவுக்கு இரண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

விபத்து குறித்து கருத்து தெரிவித்த அஸ்வினி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏற்கெனவே விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது.

தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளி காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்வதற்கு ஏர் இந்தியா விமானம்  ஏ-619 நேற்று இரவு தயார் நிலையில் இருந்தது.

விமான தொழில்நுட்ப ஊழியர் என்ஜின் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது துணை விமானி என்ஜினை இயக்கியதால் அந்த ஊழியர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விமானம் புறப்படும்போது அதனை பின்னுக்குத் தள்ளி இயக்க முயன்றபோது, சிக்னலை தவறான வகையில் புரிந்துகொண்டு என்ஜினை இயக்கியதால் அந்த சமயத்தில் என்ஜினை சரிப்பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் உள்ளே இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com