கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தில்லி கிரிக்கெட் சங்க ஊழலில் ஜேட்லி: கீர்த்தி ஆசாத் மௌனம்?

தில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது, முறைகேடு நடைபெற்றதாகக் கூறிய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜேட்லியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 2:53 pm

PTI

தில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது, முறைகேடு நடைபெற்றதாகக் கூறிய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜேட்லியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்த விவரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவேன் என கூறியிருந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத்.

இந்நிலையில் இன்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் பிஷன்சிங் பேடி, சுரீந்தர் கன்னா ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார் ஆசாத்.

அப்போது, தில்லி கிரிக்கெட் சங்கத்தின் 2011-12ஆம் ஆண்டின் பொதுக்குழுக் கூட்டத்தின் விடியோ பதிவை திரையிட்டார்.

அதில் தலைவர் ஜேட்லியிடம் கீர்த்தி ஆசாத் கேள்வி எழுப்புவதும், அவர் தில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது குற்றம் ஏதும் இல்லை என்று சொல்வதும் பதிவாகிருந்தது.

பின்னர் கீர்த்தி ஆசாத் கூறுகையில், 'தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக, அமலாக்கத் துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை இணைந்து விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.

எனினும், இந்த விவகாரத்தில் ஜேட்லியின் பெயரை எந்த இடத்திலும் தொடர்புபடுத்தி அவர் கூறவில்லை.

அப்போது, இந்த விவகாரத்தில் ஜேட்லியின் பெயரைக் குறிப்பிடாதது ஏன்? என செய்தியாளர்கள் கேட்டபோது, 'எங்கள் இருவருக்கும் இடையே அரசிலிலும், தனிப்பட்ட முறையிலும் எந்த மோதலும் இல்லை; கொள்கை அளவிலேயே நாங்கள் முரண்படுகிறோம். கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் சண்டையிட்டு வருகிறோம்' என்றார்.

பாஜக தலைவர் அமித் ஷா, கேட்டுக் கொண்டதன் பேரிலேயே ஜேட்லி பெயரை குறிப்பிடவில்லையா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, `அமித் ஷா வீட்டுக்கு காலை சிற்றுண்டிக்கு சென்றேன். அவர் எனக்கு இட்லி வழங்கினார். அது மிகவும் சுவையாக இருந்தது' என்றார்.

நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஜேட்லி, கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஆசாத் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் தனது பெயரை சேர்த்ததாக கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'இறந்து போன எனது அப்பா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எங்களுக்குள் குடும்ப உறவு உண்டு' என்றார்  ஆசாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.