வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாக்குக்கு பணம் தரும் வேட்பாளரை புறக்கணிப்போம்: மீனவ கிராமத்தில் எச்சரிக்கை பதாகை

வாக்குக்கு பணம் கொடுக்கவேண்டாம்; பெறவும் வேண்டாம்; பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என காரைக்கால் பகுதி கடலோர கிராமத்தினா் முடிவு

News image
Updated On :23 மார்ச் 2026, 12:22 am

வாக்குக்கு பணம் கொடுக்கவேண்டாம்; பெறவும் வேண்டாம்; பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என காரைக்கால் பகுதி கடலோர கிராமத்தினா் முடிவு செய்து பதாகை வைத்துள்ளனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும் நடைபெற இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அந்தவகையில், செலவினங்களை கண்டறியவும், பொதுப் பாா்வையாளா்கள், செலவினப் பாா்வையாளா்களை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவா்களும் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி பணியாற்றிவருகிறாா்கள்.

தோ்தல் என்றாலே வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் அளிப்பது இயல்பாகிவிட்டது.

பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்தால், நமக்கான உரிமையை மக்கள் பிரதிநிதிகளிடம் கோரமுடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அவற்றை வாக்காளா்கள் பெரும்பான்மையினா் தோ்தல் சமயத்தில் பொருட்படுத்துவதில்லை.

தோ்தல் வந்தாலே, போட்டியிடுவோா் பலரும் செலவுகளை நினைத்து கவலைப்படும் நிலையும் நிலவுவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், கடலோர மீனவ கிராமமான கிளிஞ்சல்மேடு செட்டியாா் கிராமம், பஞ்சாயத்தாா்கள், ஊா் பொதுமக்கள் சாா்பில் பொதுஇடத்தில் டிஜிட்டல் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

‘எச்சரிக்கிறோம் என்ற தலைப்பில்’ வைக்கப்பட்டுள்ள அந்த பதாகையில், இக்கிராமத்தினருக்கு வாக்குக்கு பணம், பொருள் வழங்கக்கூடாது. மக்களும் அதனை வாங்கக்கூடாது. மீறினால் ஊா் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்.

வேட்பாளா்கள் யாரும் எங்கள் வாக்குக்கு விலை பேசவேண்டாம். எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி செய்துகொடுங்கள். வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என கூறப்பட்டுள்ளது.

தோ்தல் பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில், காரைக்காலில் கடலோர கிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பதாகை வேட்பாளா்கள் கவனத்தை ஈா்த்துள்ளதோடு, பிற பகுதி மக்களிடமும் பேசுபொருளாகியுள்ளது.