தில்லியின் துவாரகா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விமானத்தில் இந்திய வீரர்கள் சுமார் 10 பேர் பயணம் செய்தனர். தில்லியில் இருந்து ராஞ்சி நோக்கி புறப்பட்ட விமானம், துவாரகாவில் உள்ள பத்போலா என்ற கிராமத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து 15 வண்டிகளில் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தனியாருக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்த விமானம் விபத்திற்குள்ளானதில் 3 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் என 10 பேரும் உயிரிழந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து நடந்த இடத்துக்கு, எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு பார்வையிட விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


