தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சீர்திருத்தங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை: ஜேட்லி குற்றச்சாட்டு

சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேறாமல் தடுத்து வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு

News image
Updated On :27 டிசம்பர் 2015, 10:16 am

சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேறாமல் தடுத்து வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டினார்.

தில்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:

உலக நாடுகளுக்கு இணையாக நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு அரசு விரும்புகிறது. ஆனால், சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் போன்ற தேசிய கட்சி இதுபோன்ற தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவித வக்கிர இன்பத்தை அடைகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கிறது.

முடக்கம் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். இதை மாநில பேரவைகளிலோ, வரும் கால எதிர்கட்சிகளோ தொடருமாமானல், மோசமான உதாரணமாகிவிடும்.

காங்கிரஸ் கட்சி தனது நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாடாளுமன்றம் இதுபோன்ற மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு தேவையான வேறு வழிகளை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக அமளிக்கு இடையே நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை.

இந்திய அரசியல் அமைப்பில் மாநிலங்களவை என்பது முக்கியமானது. அது இந்திய அடிப்படை கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். ஆனால், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபை மீது மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபை தொடர்ந்து அதிகாரம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாநிலங்களவை என்பது மக்களவையின் நடவடிக்கைகளை சரிப்பார்த்து சமப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். மக்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு மாநிலங்களவை எதிர்ப்பு தெரிவிக்குமானால், கூட்டு கூட்டம் நடத்தி நிறைவேற்றலாம். ஆனால், அது அடிக்கடி நடைபெறக்கூடாது என்றார் ஜேட்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.