தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியா: ஊடகவியலாளர்களுக்கு ஆசியாவிலேயே பாதுகாப்பற்ற நாடு

ஆசிய நாடுகளிலேயே, ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளது என, பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பகம் கூறியுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2015, 11:12 am

ஆசிய நாடுகளிலேயே, ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளது என, பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பகம் கூறியுள்ளது.

எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் (Reporters without borders) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

நிகழாண்டில் மட்டும் இந்தியாவில் 9 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை விட அதிகம்.

ஐந்து பத்திரிகையாளர்கள் தங்களது பணியின் போதே கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்ற நான்கு பேரும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்றே தெரியவில்லை.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமானதாக இல்லை. இந்திய பத்திரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான தேசிய அளவிலான திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும்.

நிகழ் ஆண்டில் உலகம் முழுவதும் 67 செய்தியாளர்கள் பணியின்போது கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 43 பேர் காரணம் ஏதும் தெரியாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதுதவிர 27 தொழில் முறை அல்லாத செய்தியாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்கள் பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பலியான செய்தியாளர்களில் 40 % பேர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான அல்-கய்தா மற்றும் இஸ்லாமிய தேசம் ஆகியவற்றால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.