தங்களது பிரிவுகளில் சரியாக படிக்காமல் தோல்வியடைந்த 12க்கும் அதிகமான மாணவர்கள் கான்பூர் ஐஐடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்கள் நிறுவனம் அமைத்துள்ள குழுவினரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதன் இயக்குநர் இந்திராணி மானா கூறியுள்ளார்.
ஐஐடி கான்பூர் நிறுவனத்தில் பயிலும் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்களது பிரிவுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தோல்வியடைந்தனர். இதையடுத்து அவர்களை நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
தோல்வியடைந்த மாணவர்கள் நிறுவனம் அமைத்துள்ள குழுவில் மேல்முறையீடு செய்யலாம். அவர்களது மனுவை ஆட்சிக் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என துணை பதிவாளர் ஏ.கே.மிஸ்ரா கூறினார்.
தோல்வியடைந்த மாணவர்கள் நிறுவனத்தை விட்டு நீக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இது அனைத்து ஐஐடிகளிலும் ஆண்டுதோறும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும், இச்செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

