தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோவா மீட்புக் குழுவினர் வேலைநிறுத்தம்: பணிவரையறை செய்ய வலியுறுத்தல்

கோவா மாநிலத்தில் கடற்கரையில் பணியாற்றும் மீட்புக் குழுவினர் (Life Guards) தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர்.

News image
Updated On :29 டிசம்பர் 2015, 9:15 am

கோவா மாநிலத்தில் கடற்கரையில் பணியாற்றும் மீட்புக் குழுவினர் (Life Guards) தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர். தங்களது பணியை வரையறை செய்ய வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 650 மீட்புக் குழுவினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக மீட்புக் குழுவினருக்கான தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். அதே நேரத்தில், அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனம் அனைத்து மீட்புக் குழுவினரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என கூறினர்.

கோவா மாநிலத்தின் 105 கி.மீ. நீள கடற்கரை முழுவதிலும், மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளிலும் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடல் மற்றும் ஆறுகளில் குளிக்கும்போது, தண்ணீரில் சிக்குபவர்களை மீட்பது இவர்களின் பிரதான பணியாகும்.

மீட்புக்குழுவினர் தங்கள் பணியை வரையறை செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கினர்.

அனைத்து மீட்புக் குழுவினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது காலவரையற்ற வேலைநிறுத்தமாகும். கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மீட்புக் குழுவினர் இணைந்துள்ள ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகி கிரிஸ்டோபர் பொன்சேகா கூறினார்.

ஆனால், அனைத்துப் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மீட்புப் பணியில் எவ்வித இடையூறும் இல்லை என அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள திருஷ்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளவர்களையும், அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனத்தையும் அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் திலீப் பாருலேகர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.