தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை(ஏப். 25) கொடைக்கானல் செல்லவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகின. தமிழக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
வெய்யிலின் தாக்கம் சென்னையில் அதிகம் உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு நாளை(ஏப். 25) செல்ல உள்ளதாகத் தகவல் தெரிவந்துள்ளது.
கடந்த 2019, 2024 மக்களவைத் தேர்தல்கள், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் கொடைக்கானல் செல்வதை முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை கொடைக்கானல் செல்கிறார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் வெளிநாட்டிற்கு செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
With the Tamil Nadu Legislative Assembly elections having concluded, Chief Minister Stalin is set to visit Kodaikanal tomorrow (April 25).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு யார்?

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

