தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில், இன்று காலை துணை முதல்வர் உதயநிதி, குடும்பத்துடன் விமான நிலையம் வந்திருந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.
தமிழக முதல்வரும், துணை முதல்வரும், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் பிரசாரங்கள் நிறைவு பெற்று வியாழக்கிழமை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது வரலாறு காணாத சாதனை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சென்னை விமான நிலையம் வந்தார். அவர் வெளிநாடுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் கொளுத்தும் வெய்யிலில் சுழன்று சுழன்று பிரசாரம் செய்த துணை முதல்வர், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ஒரு சிறு இடைவேளைக்காக குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Summary
Deputy Chief Minister Udhayanidhi left for abroad with his family after the elections were over.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதி

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




