இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலையில் காலமானார்.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தபோதிலும், அவ்வபோது சில படங்களிலும் நடித்து வந்தார்.
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா உள்ளிட்ட படங்கள், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கருதப்படுகின்றன. 45 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் பங்காற்றியவர்.
நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ' விருது உள்பட பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றவர், பாரதிராஜா.
பாரதிராஜாவின் மறைவுக்கு திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Director Bharathiraja has passed away
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாரண்ட் குழுவினரை வாழ்த்திய பாண்டிராஜ்!
காட்டாளன் லோகேஷ் கனகராஜ் போஸ்டர்!

தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய வெற்றிமாறனின் உதவி இயக்குநர்!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




