தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹைதரபாத் இளைஞர்கள் கைது: ஐ.எஸ். தொடர்பு குறித்த முரண்பட்ட தகவல்கள்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக சென்ற 3 இளைஞர்கள் கடந்த வாரம் நாகபுரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு முரண்டபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On :30 டிசம்பர் 2015, 2:00 pm

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக சென்ற 3 இளைஞர்கள் கடந்த வாரம் நாகபுரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு முரண்டபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் பிரிவினைவாத இயக்கத்தின் பெண் தலைவரையே அவர்கள் சந்திக்கச் சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் அப்பெண் தலைவர் தங்களுக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.

முகம்மது அப்துல்லா பாஷித், மாஸ் ஹாஸன் பாரூக், சையத்  ஓமர் பாரூக் என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடந்த வாரம் நாகபுரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சென்று அங்கிருந்து, ஐ.எஸ். அமைப்புடன் இணைவதற்காக சென்றதாக போலீஸார் கூறினர்.

தங்கள் உறவினரான மறைந்த முன்னாள் சிமி இயக்கத் தலைவர் சையது சலாவுதீன் பெயரைப் பயன்படுத்தி, காஷ்மீரில் செயல்படும் பெண்கள் பிரிவினைவாத அமைப்பான டுக்தரன்-இ-மில்லட்டின் (நாட்டின் மகள்கள்) தலைவி ஆஷியாஅந்தராபாயை சந்திக்கவே சென்றதாக அந்த இளைஞர்கள் கூறினர்.

இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஷியாஅந்தராபாய், எங்களுக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பே இல்லை. நாங்கள் காஷ்மீரின் விடுதலைக்காக மட்டுமே போராடுகிறோம் என்றார்.

இதனிடையே ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா காவல் துறை தலைவர் அனுராக் சர்மா, ஆஷியாஅந்தராபாய் தெலுங்கானாவில் பயணம் செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.