ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஜம்முவில் துப்பாக்கிச்சூடு: லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :31 டிசம்பர் 2015, 4:22 am

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள குஸ்ஸு கிராமத்தின் எல்லை பகுதியில், ராணுவத்தினருடன் போலீசார் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தீவிரவாதிகளில் ஒருவர் மன்சூன்பாத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

அப்பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா எனவும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.