ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வாஜ்பாயின் சாலை திட்டங்கள் மூலம் கிராம வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது: மோடி

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கொண்டுவந்த கிராமச் சாலைத் திட்டங்கள் மூலம் இந்திய கிராமங்களின் வாழ்வாதரங்கள் உயர்ந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image
Updated On :31 டிசம்பர் 2015, 9:01 am

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கொண்டுவந்த கிராமச் சாலைத் திட்டங்கள் மூலம் இந்திய கிராமங்களின் வாழ்வாதரங்கள் உயர்ந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தில்லி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தில்லி- மீரட் இடையே விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. நோய்டாவில் இன்று நடைபெற்ற விழாவில்  அதற்கான அடிக்கல்லை நாட்டி, பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டில் உள்ள சாலைகளை இணைப்பதன் மூலமே வளர்ச்சியை அடைய முடியும்,

முன்னாள் பிரதமர் வாய்பாய் கொண்டுவந்த பல்வேறு சாலைத் திட்டங்களால் இந்தியா, உலக நாடுகளுக்கு இணையான சாலை வசதியைப் பெற்றுள்ளது. குறிப்பாக அவர் கொண்டுவந்த கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களின் வாழ்வாதரம் உயர்ந்துள்ளதோடு, கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

மேலும் வாஜ்பாய் பதவி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தங்க நாற்கரம் திட்டத்தின் மூலம் பெருநகரங்கள் கிராமங்களுடன் இணைக்கப்பட்டன.

தற்போது தொடங்கப்பட்டுள்ள தில்லி- மீரட் விரைவுச்சாலை திட்டம் என்பது சாலைத் திட்டம் மட்டும் அல்ல, வளர்ச்சிக்கான திட்டமும் ஆகும்.

இச்சாலைப் பயன்பாட்டுக்கு வந்தால் இப்பகுதியில் உள்ள சிறுநகரங்கள் வளர்ச்சிப் பெறும். மேலும், துணை நகரங்களும் உருவாகும். மீரட், டேராடூன் நகரங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். ரூ. 7500 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் வேலவாய்ப்பு அதிகரிக்கும். டீக்கடை, சிறுகடை நடத்துவோர் இதன் மூலம் பயனடைவர்.

தனது அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் ஏழைகளின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டே செயல்படுத்தப்படுகிறது என்றார் பிரதமர் மோடி.

தில்லி-மிரட் விரைவுச் சாலை திட்டத்திற்கு தேவையான 348.6 ஹெட்ரேர் நிலப்பரப்பில் 343.36 ஹெட்ரேர் நிலப்பரப்பு ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. 87 கிலோ மீட்டர் சாலை கொண்ட இந்த திட்டத்தில் 9 கிலோமீட்டர் இணைப்பு சாலையாகவும், 6 குறுக்கு சந்துகளும், மற்றும் 4 வழி சாலை, சர்வீஸ் ரோடு, சைக்கிள் பாதை, சிறிய மற்றும் பெரிய பாலங்கள், வாகன சுரங்கப் பாதைகள், மற்றும் நடைபயணிகளுக்கான சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.