கேரளா உள்ளாட்சித் தேர்தல்: மழை மற்றும் பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்களால் வாக்குப் பதிவு பாதிப்பு

கேரள மாநிலத்தின் உள்ளாட்சிப் பதவிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கியது. அம்மாநிலத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது.
கேரளா உள்ளாட்சித் தேர்தல்: மழை மற்றும் பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்களால் வாக்குப் பதிவு பாதிப்பு
Updated on
1 min read

கேரள மாநிலத்தின் உள்ளாட்சிப் பதவிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கியது. அம்மாநிலத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது.

கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 7 மாவட்டங்களில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

இங்கு, மொத்தமுள்ள 12,651 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 44,388 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திருச்சூர், எர்ணாகுளம் பகுதியில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் மக்கள் வாக்களிப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

திருச்சூர், மலப்பபுரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 300 மையங்களில் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ-எம் கட்சியின் மாநிலச் செயலர் கொடியேறி பாலகிருஷ்ணன், சுமார் 170 இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழது சீரமைக்கப்பட்டதாவும், மற்ற இடங்களில் அதிகாரிகள் பழுதை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

வாக்குப் பதிவு இயந்திர பழுது குறித்து விரிவான விசாரணை நடத்த காவல் துறைத் தலைவர் தீர்மானித்துள்ளதாக சென்னிதாலா கூறினார்.

முதல்கட்ட தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தாங்கள் தான் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூறிவருகிறது. அதேவேளையில், இத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் வீழ்ச்சி்யின் தொடக்கமாக இருக்கும் என இடதுசாரி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com