திப்புசுல்தான் விவகாரம்: மங்களூருவில் முழு அடைப்பு

திப்பு சுல்தான் பிறந்தநாள் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் இந்து அமைப்புகள் சார்பில் மங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
திப்புசுல்தான் விவகாரம்: மங்களூருவில் முழு அடைப்பு
Updated on
1 min read

திப்பு சுல்தான் பிறந்தநாள் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் இந்து அமைப்புகள் சார்பில் மங்களூரிவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசு சார்பில் நடத்தப்பட்ட திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள் சார்பில் குடகு மாவட்டம் மடிகேரியில் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் மங்களூர் பி.சி சாலையில் நேற்று (நவ. 12) ஹரீஷ் என்ற இளைஞர் இதே விவகாரம் தொடர்பாக குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்நிகழ்வுகளை கண்டித்து பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் மங்களூரில் இன்று முழு அடைப்பு நடத்துவற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து மங்களூரிவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேரூந்துகளும், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து இல்லாததால் மக்கள் தங்கள் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு நடந்தே சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com