மோடி மூன்றுநாள் பயணமாக லண்டன் சென்றுள்ள நிலையில் 4.4 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஒ.பி.ஜி. நிறுவனம் தமிழகத்தில் அமைக்கவுள்ள 4,200 மெகா வார்ட் மின் உற்பத்தி நிலையமும் அடங்கும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று லண்டன் சென்று சேர்ந்தார். அங்கு இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் உரையாற்றினார்.
பின்னர் மோடிக்கும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இடையே 24 வகையான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இங்கிலாந்தைச் சேர்ந்த மெர்லின் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் புதுதில்லியில் அமைக்கவிருக்கும் மெழுகு அருங்காட்சியகமும் ஒன்றாகும். வரும் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படும்.
மேலும், வோடபோஃன் தொலைதொடர்பு நிறுவனம் மோடியின் கனவுத் திட்டங்களான `டிஜிட்டல் இந்தியா 'மற்றும் `மேக் இன் இந்தியா'ஆகியவற்றில் 1.4 மில்லிடன் டாலர் முதலீடு செய்கிறது.
சோலார் மின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஐரோப்பாவின் லைட்சோர்ஸ் நிறுவனம், இந்திய நிறுவனத்துடன் இணைந்து 3 ஜிகா வார்ட் மின் உற்பத்தி செய்வதற்கான மின் நிலையங்களை அமைக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த ஒ.பி.ஜி. மின் நிறுவனம் சார்பில், தமிழகத்தில் 4,200 மெகா வார்ட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
மேலும், இந்தியாவின் இந்தூர், புனே, அமராவதி நகரங்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் இங்கிலாந்து வழங்கும் என இரு பிரதமர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


