கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்து வரும் நிலையில் நடப்பு ஆண்டில் ஒரு குவின்டால் அரவைக்கான அரசு மானியமாக ரூ. 4.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மானியத்தை வரும் காலங்களில் அரசே நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
கரும்பு அரவை ஆலையகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 21,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அரவைக்கான மானியத்தை நேரடியாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு, அரவை மானியமாக குவின்டாலுக்கு ரூ. 4.50 வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவை இந்திய கரும்பு ஆலை கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்

இருந்தும் பயன்படாத கைப்பேசி பைகள்; பெயரளவுக்கு செயல்பட்ட சக்கர நாற்காலிகள்

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

