இந்தியாவில் வெண்மை புரட்சியை ஏற்படுத்திய வர்கீஸ் குரியன் பிறந்தநாள்: கூகுள் மரியாதை

இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு தந்தை என்று கருதப்பட்ட கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ் குரியனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் தனது டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது.
இந்தியாவில் வெண்மை புரட்சியை ஏற்படுத்திய வர்கீஸ் குரியன் பிறந்தநாள்: கூகுள் மரியாதை
Updated on
1 min read

இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு தந்தை என்று கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ் குரியனின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் தனது டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது.

இந்தியாவின் பால்க்காரர் என்று அழைக்கப்பட்ட குரியன், பால் உற்பத்தியில் பின்தங்கியிருந்த இந்தியாவை, உலகிலேயே மிக முக்கிய பால் உற்பத்தி நாடாக மாற்றியதில் பெரும் வங்கு வகித்தவர்.

அவரது 94வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுளின் டூடுளில் இன்று, மாடுகளுடன் குரியன் அமர்ந்து கொண்டு கையில் பால் கேனை வைத்திருப்பது போன்ற டூடுல் போடப்பட்டுள்ளது.

1965ம் ஆண்டு பிரதமராக இருந்த லால் பஹதூர் சாஸ்திரியால், தேசிய பால் உற்பத்தி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக குரியன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com