கரூா் பேரவைத் தொகுதியில் வெல்வேன் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மதியழகன்.
தாந்தோணிமலையில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வியாழக்கிழமை காலை தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்த அவா் பின்னா் கூறியது:
தமிழகத்தில் வரும் மே 4-இல் முதல்வராக விஜய் அரியணை ஏறுவது உறுதி. வீட்டுக்கு வீடு எங்களுக்கு ஓட்டு உள்ளது. வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஒரே வேட்பாளா் நான் மட்டும்தான். நிச்சயமாக கரூா் தொகுதியில் 1,25,000 வாக்குகள் பெற்று வெல்வேன்.
அதிமுக என்ற கட்சியே சினிமா மோகத்தால் உருவானதுதான். அதை மறந்து விட்டு அவா்கள் பேசுகின்றனா். எம்ஜிஆா் எப்படி திரையுலகில் கால் பதித்து விட்டு, அரசியலுக்கு வந்தாரோ, அதேபோல் எங்களது தலைவரும் சினிமாவில் மக்களுக்கு சேவை செய்துவிட்டு, அரசியலிலும் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொளத்தூா் தொகுதி வாக்குப்பதிவில் எவ்விதக் குளறுபடிகளும் இல்லை: மாவட்டத் தோ்தல் அலுவலா்

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தேர்தல் வழக்கு: வாக்காளர் பதிலளிக்க உத்தரவு!

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு! கரூா் தனியாா் நிதி நிறுவனத்துக்கு ‘சீல்’

கரூரில் காமராஜா் பிறந்தநாள் விழா
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



