தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

350 கி.மீ. தூரம் வரை தாக்கும் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்ட பிரித்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2015, 9:36 am

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்ட பிரித்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸா மாநிலத்தின், பலாசூர் மாவட்டத்தின், சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இச்சோதனை நடைபெற்றது.

சுமார் 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகணை, 500 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லும் வலிமையுடையது.

கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை, திட மற்றும் திரவ எரிபொருளால் இயங்கக்கூடியது. மேலும், அணு மற்றும் வழக்கமான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.

சோதனையின் போது பிரித்வி-2 ஏவுகணையின் செயல்பாடுகள், ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ராடார்கள், ராடார்கள், மின் ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தொலைத் தொடர்பு நிலையங்களால் கண்காணிக்கப்பட்டது என டி.ஆர்.டி.ஓ. அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.