

மும்பை அருகே பதினைந்து வயது பெண் நண்பரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தததோடு, அதை விடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரவவிட்டதாக நான்கு வளர் இளம் பருவ (டீன் ஏஜ்) மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை அருகேயுள்ள மலாட் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாட்ஸ் அப்பில் பரவிய விடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர் ஒருவர், அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்களை கைது செய்தனர்.
கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, மலாட் புறநகர் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு படிப்பதற்காக அந்த 15 வயது பெண் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மேலும் மூன்று மாணவர்களுடன் இணைந்து அப்பெண்ணை அவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை விடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து வெளியே சொன்னால், விடியோவை இணையதளத்தில் பதிவேற்றிவிடுவதாக அப்பெண்ணை அந்த மாணவர்கள் மிரட்டி வந்துள்ளனர்.
பின்னர், அவர்கள் அந்த விடியோவை வாட்ஸ் அப்பில் பரவவிட்டுள்ளனர். அதிவேகமாக பரவிய அந்த விடியோவை பெண்ணின் உறவினர் பார்த்ததால், மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.