ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இலங்கை புறப்பட்டார் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங்

இந்தியா இலங்கை இடையேயான பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று இலங்கை புறப்பட்டு சென்றார்.

News image
Updated On :29 நவம்பர் 2015, 10:09 am

இந்தியா இலங்கை இடையேயான பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று இலங்கை புறப்பட்டு சென்றார்.

இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவ தளபதியின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய பெருங்களிடல் உள்ள நாடுகளில் இலங்கை முக்கியமான அண்டை நாடாக விளங்குகிறது என ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பில் இணைந்து செயலாற்றுவது இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பாகும்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு மட்டங்களில் செய்யப்படும் தகவல் பரிமாற்றங்கள், ராணுவ ரீதியிலான ஒத்துழைப்புகள் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.

இரு நாட்டு ராணுவங்கள் இடையே வீரர்களுக்கான பயிற்சி, அதிகாரிகள் மட்டத்திலான ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவை செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இலங்கை செல்லும் ராணுவத் தளபதி அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கிறார். மேலும், ராணுவ பயிற்சி மையங்களையும் அவர் பார்வையிடுகிறார். 

ராணுவ தளபதியின் இந்த பயணம் இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இரு நாடுகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ராணுவ செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.