ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கட்டாக் மருத்துவமனை தீ: 22 சிறுகுழந்தைகள் தப்பின

கட்டாக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின், சிறு குழந்தைகள் பிரிவில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது

Updated On :29 நவம்பர் 2015, 8:30 am

கட்டாக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின், சிறு குழந்தைகள் பிரிவில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 22 சிறு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின.

கட்டாக் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் முதுநிலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், சிசுபவன் எனப்படும் சிறுகுழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விரைந்து செயல்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுகுழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கட்டாக் மாவட்ட ஆட்சியர் என். சி. மிஸ்ரா, பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிசுபவனில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 குழந்தைகளும் எவ்வித சேதராமுமின்றி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும், இந்த தீ விபத்தில் பல மருத்துவ உபகணரங்கள் சேதமடைந்தன.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட தொழில்நுட்பக் குழுவுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி இங்குள்ள ஆச்சாரியா ஹரிகர் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.