ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெங்காய விலை உயர்வு: எகிப்தில் இருந்து 18 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி

இந்தியாவில் வெங்காய உற்பத்தி பாதிப்பு காரணமாக விலை உயர்ந்ததால், கடந்த 2 மாதங்களில் மட்டும், எகிப்தில் இருந்து 18

News image
Updated On :3 அக்டோபர் 2015, 10:10 am

இந்தியாவில் வெங்காய உற்பத்தி பாதிப்பு காரணமாக விலை உயர்ந்ததால், கடந்த 2 மாதங்களில் மட்டும், எகிப்தில் இருந்து 18 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்துள்ளது.

மிகவும் சிவப்பு நிறத்தில் இருக்கும் எகிப்து வெங்காயங்கள், தற்போது இந்திய சந்தைகளில் இடம்பிடித்துள்ளன.

இது குறித்து எகிப்து நாட்டு ஏற்றுமதித் துறை அதிகாரி கூறுகையில், இந்தியாவுக்கு, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 18 ஆயிரம் டன் வெங்காயத்தை எகிப்தில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்களில், பருவம் தவறி பெய்த மழையின் காரணமக, வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஒரு கிலோ வெங்காயம் ரூ.60-70 வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.