ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பிகார்: பாஜக 160 தொகுதிகளில் போட்டி; தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்தது

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக

Updated On :

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக திங்கள்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.
 இதன்படி, பிகார் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக 160 இடங்களில் போட்டியிடுகிறது. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) 40 தொகுதிகளிலும், மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 23 தொகுதிகளிலும், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதன்மூலம், பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவிய சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.
 தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான், குஷ்வாஹா, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி, முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி ஆகியோருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமித் ஷா கூறியதாவது:
 தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகள் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
 கூட்டணியில் இருக்கும் 4 கட்சிகளின் தொண்டர்களும் ஒன்றிணைந்து, சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
 பாஜகவுடனான 16 ஆண்டுகாலக் கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கடந்த 2013-ஆம் ஆண்டு முறித்துக் கொண்டதற்கு முதல்வர் நிதீஷ் குமாரே காரணம். இதன்மூலம், பாஜகவை அவர் முதுகில் குத்திவிட்டார்.
 நாட்டில் நடைபெற்ற ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்களுக்கு காங்கிரúஸ காரணம். அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பிகாரில் ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று நிதீஷ் குமார் தெரிவிக்கிறார். இதேபோல, பிகாரில் காட்டாட்சி நடத்திய ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பிகாரை குற்றமில்லாத மாநிலமாக்குவேன் என்றும் அவர் சத்தியம் செய்கிறார்.
 பிகாரை ஆட்சி செய்வதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளுக்கும் ஏற்கெனவே மக்கள் வாய்ப்பளித்துவிட்டனர். எனவே, பிகாரை ஆட்சி செய்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும் என்று மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
 கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மாஞ்சி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறாகும். அதில் எந்த உண்மையும் இல்லை என்றார் அமித் ஷா.
 மாஞ்சி மகிழ்ச்சி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அளிக்கப்பட்ட 20 இடங்களுடன் சேர்த்து, பாஜகவின் சின்னத்திலும் மாஞ்சி கட்சித் தலைவர்கள் சிலர் போட்டியிடவுள்ளனர். முன்பு, 15 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று வெளியான தகவல்களால் அதிருப்தியிலிருந்த மாஞ்சி, தொகுதிப் பங்கீட்டில் தனது கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதால் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளார்.
 பிகார் சட்டப் பேரவைக்கு வரும் அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி முதல், நவம்பர் மாதம் 5-ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், நவம்பர் மாதம் 8-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.