
ஒடிஸா மாநிலத்தில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த மாநிலத்தின் தெங்கனால் மாவட்டத்தில் காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2-ஆக பதிவானது. மீண்டும் 11 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 2.8-ஆக பதிவானது.
இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கமும் ஒரு சில விநாடிகளே உணரப்பட்டன. இருப்பினும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.
அதேவேளையில், நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கோ, அவர்களின் உடமைகளுக்கோ எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






