ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பெண் எழுத்தாளருக்கு அனுமதி மறுப்பால் சர்ச்சை: கலாம் நூல் வெளியீட்டு விழா ரத்து

கேரளத்தில் ஆன்மிகத் தலைவர் பங்கேற்கவிருந்த அப்துல் கலாம் நூல் வெளியீட்டு விழாவுக்கு பெண் எழுத்தாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Updated On :

கேரளத்தில் ஆன்மிகத் தலைவர் பங்கேற்கவிருந்த அப்துல் கலாம் நூல் வெளியீட்டு விழாவுக்கு பெண் எழுத்தாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பெண் எழுத்தாளருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், நூல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் எழுதிய "சுவாமி பிரமுக் உடனான ஆன்மிக அனுபவங்கள்' என்ற நூலை, மலையாளத்தில் "காலாதீதம்' (காலத்துக்கு அப்பால்) என்ற பெயரில், பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி எஸ்.கர்த்தா மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

திருச்சூரில் சனிக்கிழமை நடைபெறவிருந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில், "பிஏபிஎஸ் சுவாமி நாராயணா சன்ஸ்தா' என்ற ஹிந்து ஆன்மிக அமைப்பின் தலைவர் பிரம்ம விஹாரிதாஸ் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே, "விழா மேடையில் பெண்கள் இருப்பதை சுவாமிஜி விரும்பவில்லை; தாங்கள் அவர் பார்வையில் இருந்து விலகியிருக்க வேண்டும்' என எழுத்தாளர் ஸ்ரீதேவிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீதேவி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஆன்மிக அமைப்பின் விதிகளின்படி, சுவாமிஜியுடன் ஒரே மேடையில் பெண்கள் பங்கேற்கக் கூடாதாம். அப்படியானால், பெண்களின் தூய்மையற்ற நிழல் கூட அவர் மீது விழாமல் இருப்பதற்கு, மேடை முன்பாக, முதல் மூன்று வரிசைகளை அவரது ஆதரவாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ள தலிபான்களுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? என்று அவர் விமர்சித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஸ்ரீதேவிக்கு ஆதரவாக, நூல் வெளியீட்டு விழா நடைபெறவிருந்த கேரள சாகித்ய அகாதெமி முன்பாக, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, பெண் கவிஞர் சுகதாகுமாரி கூறுகையில், "கடவுளை பெண் வடிவில் காணும் ஒரே மதம், ஹிந்து மதமாகும்; சுவாமி விவேகானந்தர், ஸ்ரீநாராயண குரு, ரமண மகரிஷி போன்ற துறவிகளும், சமூக சீர்திருத்தவாதிகளும் கூட பெண்கள் மீது பாகுபாடு காட்டவில்லை' என்றார்.

இதனிடையே, அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் ஜானி கூறுகையில், "வழக்கமாக நூல் வெளியீட்டு விழாக்களில் மொழிபெயர்ப்பாளர்களை அழைப்பதில்லை; இந்த நூலை, அப்துல் கலாமுடன் இணைந்து எழுதிய அருண் திவாரி, பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோர் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.