ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ராஜ்நாத் சிங்குடன் இன்று மாலை மெஹபூபா முஃப்தி சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தில்லியில் சந்திக்க உள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2016, 7:12 am

புது தில்லி: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தில்லியில் சந்திக்க உள்ளார்.

கடந்த 4-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி பதவியேற்ற பின்பு, இதுவே அவரது முதல் சந்திப்பாகும். இன்று மாலை 4 மணிக்கு ராஜ்நாத் சிங்கை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக மாநில மற்றும் தேசிய அளவில் தனது நிர்வாகப் பொறுப்புகளை மெஹபூபா ஏற்க உள்ளார்.

மெஹபூபா முஃப்தியின் அமைச்சரவையில் 17 கேபினட் அமைச்சர்களும், 3 மாநில அமைச்சர்களும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.