அவுரங்காபாத்: பிகார் மாநிலம், அவுரங்கபாத் மாட்டத்தில் உள்ள திருமண விழாவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
அவுரங்கபாத் டாரர் கிராமத்தில் ஜடா ராம் என்பவரின் மகனின் திருமணம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணமகனின் தந்தை உள்பட 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தீயில் கருகி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக பிகார் அரசு வழங்க முடிவு செய்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மத்திய அமைச்சர், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் மற்றும் கார்நாடக எம்.பி யுபேந்திர குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.