பத்து நாள் 'விபாசனா' தியானப்பயிற்சி: தர்மசாலா சென்றார் கெஜ்ரிவால்!

நாளுக்கு நாள் அதிகரித்தது வரும் அரசியல் களத்தின் சூட்டைத் தணிப்பதற்காக, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பத்து நாள் 'விபாசனா' தியானப் பயிற்சிக்காக ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தர்மசாலாவுக்கு சென்றுள்ளார்.
பத்து நாள் 'விபாசனா' தியானப்பயிற்சி: தர்மசாலா சென்றார் கெஜ்ரிவால்!
Updated on
1 min read

நாளுக்கு நாள் அதிகரித்தது வரும் அரசியல் களத்தின் சூட்டைத் தணிப்பதற்காக, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பத்து நாள் 'விபாசனா' தியானப் பயிற்சிக்காக ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தர்மசாலாவுக்கு சென்றுள்ளார்.

'விபாசனா' எனபது இந்தியாவின் பழமையான தியான முறைகளில் ஒன்றாகும்.இந்த தியானப் பயிற்சி முகாமில் பங்கெடுப்போருக்கு அரிசி சாதம், பருப்பு மற்றும் உலர் திராட்சை உள்ளிட்ட எளிய உணவுகள் வழங்கப்படும்.செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் அலைபேசி உபயோகிப்பது முற்றிலும் தடைசெய்யபடும்.

கெஜ்ரிவால் தரம்கோட்  பகுதியில் உள்ள ஹிமாச்சல் விபாசனா மையத்தில் தங்க உள்ளார். இது தலாய் லாமாவின் தங்குமிடத்திற்கு அருகில் உள்ளது. இது தொடர்பாக மையத்தின் பொறுப்பாளர் பவன் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விபாசனா பயிற்சி முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது.மறுநாள் கெஜ்ரிவால் டெல்லி திரும்பி விடுவார். இந்த காலகட்டத்தில் அவர் தனியாகவே இங்கு தங்கியிருப்பார். பாதுககாவலர்கள் உட்பட யாரும் அவரோடு இருக்க மாட்டார்கள். யாரும் அவரை சந்திக்க வும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முகாமில் 4 மணிக்குத் தொடங்கும் கெஜ்ரிவாலின் ஒரு நாள் என்பது இரவு 9.30 மணிக்கு முடியும்,. இடைவெளியில் தியான வகுப்புகள் நடத்தப்படும்.   இந்த பத்து நாள்முகாம் என்பது விபாசனா தியான முறை குறித்த ஒரு ஆரம்ப கட்ட அறிமுகம் மட்டுமே ஆகும்.

இவ்வாறு பவன் சர்மா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com