தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மும்பை-கோவா பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2016, 7:09 am

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தின் மஹாட் பகுதி அருகே மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சாவித்ரி நதியின் மீது அமைந்துள்ள ஆங்கிலேயர் காலத்துப் பாலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது. இதில், பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றுக்குள் விழுந்தன.

இந்த விபத்தில், நீரில் மூழ்கிய 2 பயணிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர். இந்நிலையில் இன்று மேலும் இரண்டு பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருந்த 20 பயணிகளின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.

பேரிடர் மேலாண்மைக் குழு வீரர்களுடன் இணைந்து, கடலோரக் காவல் படை உள்ளிட்ட அமைப்புகளும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.