தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய அரசு உதவும்: பிரதமர் மோடி

காஷ்மீர் மாநிலத்திற்கு தற்போது அமைதி தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2016, 11:07 am

அலிராஜ்பூர்: காஷ்மீர் மாநிலத்திற்கு தற்போது அமைதி தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், வளர்ச்சிக்கும் எது தேவையோ அதற்கு மெஹபூபா தலைமையில் செயல்படும் அரசு உரியத் தீர்வை கொண்டு வரும்.

கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதால் அங்கு வன்முறை வெடித்து வருகின்றது. பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட தொடர் மோதலில் 55 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஷ்மீரில் மக்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 32 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு தற்போது அமைதி தேவைப்படுகின்றது. மேலும் காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு நம் அனைவரும் உதவிட வேண்டும். மக்களின் வாழ்வாதார நன்மைக்கு எது தேவையோ அதற்கு மத்திய அரசு உதவும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.