ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காஷ்மீரில் 34-வது நாளாக தொடரும் ஊரடங்கு உத்தரவு: பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பள்ளத்தாக்கு பகுதிகளில் 34-வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2016, 5:33 am

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், பள்ளத்தாக்கு பகுதிகளில் 34-வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.

புல்வாமா, குல்கம், சோபியன் மற்றும் அனந்த்நக் ஆகிய பகுதியில் தொடர்ந்து 34-வது நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. செல்லிடப்பேசி மற்றும் இணையதளச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 50-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், தொடர்ந்து வெடித்து வரும் கலவரத்தில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.