கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மீட்கப்பட்ட டிவிட்டர் கணக்கு: வெறுப்பாளர்களை கலாய்த்த ராகுல்!

நேற்று விஷமிகளால் 'ஹேக்' செய்யப்பட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது. அந்த கணக்கில் இருந்து அவர் தனது வெறுப்பாளர்களுக்கு  நக்கல் ட்வீட் செய்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:50 pm

புதுதில்லி: நேற்று விஷமிகளால் 'ஹேக்' செய்யப்பட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது. அந்த கணக்கில் இருந்து அவர் தனது வெறுப்பாளர்களுக்கு  நக்கல் ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு நேற்று மதியம் 'ஹேக்' செய்யப்பட்டதுa. அந்த கணக்கைப் பயன்படுத்தி ஆபாச ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கணக்கு இன்று காலை மீட்கப்பட்டது.

அதன் வழியாக ட்வீட் செய்த ராகுல் காந்தி, 'இங்கிருக்கின்ற அனைத்து வெறுப்பாளர்களே! உங்களை எல்லாம் நான் விரும்புகிறேன்.நீங்கள் அனைவரும் அழகானவர்கள். ஆனால் உங்கள் வெறுப்பு உங்கள் கண்களை மறைக்கிறது.' என்று தெரிவித்துளளார்.

இதே போல் இன்று காலை முடக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.