தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சேப்பாக்கம் திடலில் அதிர்ந்த அனிருத் பாடிய ராவண மவன்டா பாடல்!

சேப்பாக்கம் கிரிக்கெட் திடலில் அனிருத் பாடிய விஜய்யின் பாடல் குறித்து...

Ravanaa Mavanda poster, Anirudh.

ராவண மவன்டா போஸ்டர், அனிருத். - படங்கள்: இன்ஸ்டா / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ், அனிருத்.

Published On :27 பிப்ரவரி 2026, 5:22 pm IST

சேப்பாக்கம் திடலில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய விஜய்யின் ராவண மவன்டா எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்தப் பாடல் நடிகர் விஜய் கடைசியாக நடித்து, இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத ’ஜன நாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கில் விஜய் பாடல்

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவும் ஜிம்பாப்வே அணியும் நேற்று (பிப்.26) சென்னையிலுள்ள சேப்பாக்கம் திடலில் மோதின. இதில், இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. தனது இசையில் உருவான பல பாடல்களை அனிருத் பாடினார். அந்த வரிசையில் அவர் பாடிய ’ராவண மவன்டா’ எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்தப் பாடலுக்கு சேப்பாக்கம் திடலில் இருந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் அடைந்தார்கள். இந்த விடியோ இணையத்தில் வைரலானது.

சேப்பாக்கில் தடை செய்யப்பட்ட விசில்

இந்த உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியது.

அடுத்த சில போட்டிகளிலேயே சேப்பாக்கில் விசில் தடைசெய்யப்பட்டதால் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

பின்னர், ஐசிசி தடைசெய்யப்பட்ட பொருள்கள் பட்டியலில் விசிலும் இருப்பதாக பேனர்கள் திடலுக்கு முன்பாக வைக்கப்பட்டது.

ஏற்கெனவே, இந்த டி20 உலகக் கோப்பைக்காக அனிருத் பாடல் இயற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Vijay's song Ravana Mavanda, sung by composer Anirudh at the Chepauk stadium, went viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.