நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது பற்றி...

News image

பெங்களூரு சின்னசாமி மைதானம் - கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:36 am IST

பெங்களூரு சின்னசாமி திடலில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், நீதிபதி குன்ஹா தலைமையிலான குழுவின் அறிக்கை மற்றும் கர்நாடக அரசின் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள சின்னசாமி திடலில் ஜூன் 4 ஆம் தேதி ஆர்சிபி சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைக் கூறி, பெங்களூரு சின்னசாமி திடலில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால், பெங்களூருவில் நடைபெறவிருந்த மகளிர் உலகக் கோப்பை போட்டி வேறு திடலுக்கு மாற்றப்பட்டது.

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், திடலை திறப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், கூட்டநெரிசல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி குன்ஹா குழு, சின்னசாமி திடலுக்குள் பாதுகாப்பை மேம்படுத்த 17 பரிந்துரைகளை வழங்கியது. அதேபோல், பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மகேஷ்வர் ராவ் தலைமையிலான அரசின் குழுவின் சில பரிந்துரைகள் வழங்கியது.

இந்த பரிந்துரைகளை மார்ச் 15 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்ய கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஐபிஎல் 2026 போட்டிகளை சின்னசாமி திடலில் நடத்துவது குறித்து வியாழக்கிழமை தீவிர ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு, மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த சீசனில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருப்பதால், இந்தாண்டின் தொடக்க போட்டியும், இறுதிப் போட்டியும் பெங்களூரு திடலில் நடத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக ஆர்சிபி அணி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.