தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சேப்பாக்கத்தில் தடை செய்யப்பட்ட விசில்..! அரசியல் காரணமா?

சென்னை சேப்பாக்கம் திடலில் முதல்முறையாக தடை செய்யப்பட்ட விசில் குறித்து...

சேப்பாக் திடல், விசில். - படங்கள்: எக்ஸ் / சிஎஸ்கே, சிஎஸ்கே ஃபேன் கிளப்.

Published On :8 பிப்ரவரி 2026, 3:42 pm IST

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடலில் முதல்முறையாக விசில் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை!

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 182/6 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 183/5 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரசிகர்கள் திடலுக்குள் விசில் கொண்டுபோக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திடலுக்குள் யாராவது விசில் கொண்டுவருகிறார்களா என்பதைக் கண்காணிக்க ஆங்காங்கே காவலர்களும் நியமிக்கப்பட்டதாக சமூக ஊடங்களில் குற்றச்சட்டு வைக்கப்படுகிறது.

ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் காரணமா?

திடலுக்கு வெளியேவும் விசில்களை விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமாக விசில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சேப்பாக்கத்தில் முதல்முறையாக விசில் தடைசெய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியின் தாரக மந்திரமான ‘விசில் போடு’ என்பதற்கு அனுமதி இல்லையெனில் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் செல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிஎன்சிஏ தனது எக்ஸ் பக்கத்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் பட்டியலில் விசில் இல்லாததும் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

Summary

Whistles banned at Chepauk Stadium during t20 world cup match.! is this political agenda?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.