கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும் புகாரில் உண்மையில்லை என்றும், ராணுவ பயிற்சி மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகம் அருகே ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகவும், சுங்கச்சாவடிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பதாவது, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் குவிக்கப்படவில்லை. ராணுவத்தினர் தங்களது வழக்கமான பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். அவ்வளவே என்று பதில் அளித்துள்ளார்.
மேலும், சுங்கச் சாவடிகளில் பாதுகாப்புக்காக மட்டுமே ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தேவையில்லாமல் பிரச்னையாக்கப்படுவதாக பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


