யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போலி ரூபாய் நோட்டுக்கள் கடத்தல் குறைந்துள்ளது: வெங்கய்ய நாயுடு தகவல்!

நாடு முழுவதும் போலி ரூபாய் நோட்டுக்கள் கடத்தல் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார் .

News image
Updated On :5 டிசம்பர் 2016, 9:05 am

புதுதில்லி: நாடு முழுவதும் போலி ரூபாய் நோட்டுக்கள் கடத்தல் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவித்துள்ளதாவது:

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2015-ஆம் ஆண்டு ரூ.43.83 கோடியாக இருந்த போலி ரூபாய் நோட்டுகள் கடத்தலின் மதிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான தகவலின்படி ரூ.27.70 கோடியாக குறைந்துள்ளது.

அதேபோல் எல்லைப்பாதுகாப்பு படை அளித்துள்ள தகவல்களின் படி, இந்திய-வங்காளதேச எல்லையின் வழியாக போலி ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவது கடந்த எட்டு ஆண்டுகளாக அதிகரித்துவந்தது. ஆனால் தற்போது கடந்த ஆண்டு ரூ.2.83 கோடியாக இருந்த கடத்தல், இந்த ஆண்டு ரூ.1.53 கோடியாக குறைந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முழுமனதோடு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்று தெரிவித்த அவர், நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் அலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் பணபரிமாற்ற முறை குறித்து பெண்கள்  மற்றும் வயதானவர்களுக்கு எடுத்துக் கூறி உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் தனது ட்வீட்களில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.