பணத்தட்டுப்பாடால் பரிதவிக்கும் உ .பி: விமானத்தில் வந்த ரூ.5000 கோடி!
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து கடுமையான பணத்தட்டுப்பாடால் பரிதவிக்கும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு, இந்திய ரிசர்வ் வங்கி இன்று விமானத்தில் ரூ.5000 கோடியை அனுப்பி வைத்துள்ளது.


லக்னோ: பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து கடுமையான பணத்தட்டுப்பாடால் பரிதவிக்கும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு, இந்திய ரிசர்வ் வங்கி இன்று விமானத்தில் ரூ.5000 கோடியை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த மாதம் 8-ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடும் நெருக்கடி உண்டானது. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் அளவுக்கு நிலைமை சிக்கலானது.
இதனைத் தொடர்ந்து நிலைமையை சீராவக்குவதற்காக ரூ.5000 கோடி அளவுக்கு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி இன்று பலத்த பாதுகாப்பபுடன் சரக்கு விமானத்தில் கான்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த தொகையானது விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்பு கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களுக்கு சமமாக பிரித்து அனுப்பப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...