டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் சுஷ்மா

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Updated On :19 டிசம்பர் 2016, 8:56 am


புது தில்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 10ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் இன்று வீடு திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் உள்ளிட்டோரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.