யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாகிஸ்தான் சிறையில் வாடும் 439 இந்திய மீனவர்கள் விடுதலை! 

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய மீனவர்கள் 439 பேர் விரைவில் இரண்டு கட்டங்களாக விடுதலை ஆக உள்ளதாக இது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்பு ஒன்று கூறி உள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2016, 6:55 am

மும்பை: பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய மீனவர்கள் 439 பேர் விரைவில் இரண்டு கட்டங்களாக விடுதலை ஆக உள்ளதாக இது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ அமைப்பு ஒன்று கூறி உள்ளது.

பாகிஸ்தான், இந்தியாவுக்கு இடையீயான் உறவுகளை வலுப்படுத்தும் பொருட்டு, ‘பாகிஸ்தான் மற்றும் இந்திய மக்களுக்கான சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்கான மன்றம்' என்னும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜதின் தேசாய் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் வாடி வரும் 439 இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை ஆக உள்ளனர். இவர்களில் 220 மீனவர்கள் முதல் கட்டமாக வரும் ஞாயிறுஅன்று விடுதலையாக உள்ளார்கள். மீதமுள்ள 219 பேர் வரும் ஜனவரி 5-ஆம் தேதி அன்று விடுதலை செய்யபடுவார்கள்.

இரு தரப்பிற்கு இடையேயான பேச்சுவார்த்தை என்பது முற்றிலுமாக நின்றுவிட்ட நிலையில் இந்த மீனவர்களின் விடுதலை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாக இந்திய சிறைகளில் வாடும் பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்யுமாறும் நாங்கள் கோரி வருகிறோம்.  

இவ்வாறு தேசாய் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.