காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கல்லூரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் திருநங்கை மனாபி : வேதனை தரும் காரணம்

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு 19 மாதங்களில் அந்த பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் திருநங்கை மனாபி பண்டோபாத் யாய்.

News image
Updated On :30 டிசம்பர் 2016, 10:37 am


மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு 19 மாதங்களில் அந்த பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் திருநங்கை மனாபி பண்டோபாத் யாய்.

கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவிகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால், தான் இந்த பதவியை ராஜினாமா செய்வதாக மனாபி கூறியுள்ளார்.

இவர் பொறுப்பேற்ற பிறகு, கல்லூரியில் ஏற்பட்ட சில பிரச்னைகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் போராட்டம் போன்றவை இவரது ராஜினாமாவுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், புதுப்பெண்ணைப் போன்ற நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். திருமணமாகி வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை வரவேற்பதும், ஒரு வருடத்துக்குப் பிறகு, அவளை கொடுமை செய்து எரித்துக் கொள்வார்கள். தொடர்ச்சியான போராட்டங்களால் நான் சோர்வடைந்துவிட்டேன். ஏராளமான நம்பிக்கையோடு உள்ளே வந்தேன்.

தற்போது தோற்றுவிட்டதாக உணர்கிறேன் என்று வருத்தத்தோடு கூறியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டது மிகவும் பெருமையாக பேசப்பட்டது.

முன்னதாக, 2003ம் ஆண்டு பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனாபி, அதே மாவட்டத்தில் விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.