தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்த 20 பேரில் நால்வர் இந்தியர்?

போர் பகுதிகளிலிருந்து தப்பி செல்ல முயன்ற 20 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுவெளியில் கழுத்து அறுத்துக் கொலை செய்தனர். அவர்களில் 4 பேர் இந்தியர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2016, 3:50 am

போர் பகுதிகளிலிருந்து தப்பி செல்ல முயன்ற 20 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுவெளியில் கழுத்து அறுத்துக் கொலை செய்தனர். அவர்களில் 4 பேர் இந்தியர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

போர் நடைபெறும் பகுதிகளிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக இராக் நாட்டின் மோசூல் நகரில் சில நாள்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் 20 பேரை பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்டவர்களில் 4 பேர் இந்தியர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த 23 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். அவர்களில் 6 பேர் சிரியா மற்றும் இராக் நாடுகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்களில் இறந்துவிட்டனர்.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்தவர்களில் இந்தியர்கள் யாரும் உள்ளனரா என்பது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.