

பாலிவுட் நடிகர் அனுபம் கேருக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்காத விவகாரம் குறித்து அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக செயலர் ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் கலைஞர்களுக்கு எவ்வித பாகுபடுமின்றி அரசு விசா வழங்கி வருகிறது. அதேநேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகருக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கவில்லை. இதுகுறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் எதிர் நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மக்களிடையே ஓற்றுமையை வளர்க்க முடியும்.
மேலும், சகிப்பின்மை குறித்து பேசிய அறிவாளிகள் எல்லாம் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சகிப்பின்மைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் எல்லாம் அமைதியாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றார் ஸ்ரீகாந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.