நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலையில் நீராவி கசிவு காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிக்காக கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலை கடந்த ஜனவரி 30ம் தேதிதான் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 8.35 மணியளவில், அணு உலையில் நீராவி கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முதல் அணு உலையில் இதுவரை 582 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்றுதான் முதல் முறையாக 757 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
எனினும், அணு உலைக்கு நீர் செல்லும் டர்பைன் பகுதியில் லேசான நீராவி கசிவு ஏற்பட்டதை அடுத்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பாதிப்பு சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று கூடங்குளம் அணு நிலைய இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியுள்ளார்.
கோளாறு சரி செய்யப்பட்டு பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


