பெங்களூரு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தேஜாஸ் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்பட்டு முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தனர் இந்திய விஞ்ஞானிகள்.
சூப்பர்சோனிக் ஒற்றை இயந்திர விமானம், தேஜாஸ், ஆகிய 2 விமானங்களையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL), ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சி (ADA) இணைந்து வடிவமைத்துள்ளது. இந்திய முறைப்படி பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் விழா நடத்தப்பட்டது.
இந்த விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான ஜெஎப் - 17 ரக போர் விமானத்தைவிட அதிகசக்தி வாய்ந்ததாகும்.
நடப்பு நிதியாண்டில் இதுபோன்ற 6 போர் விமானங்களையும், அடுத்த ஆண்டில் 8 விமானங்களையும் தயாரித்து வழங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தேஜாஸ் போர் விமானங்களை, அடுத்த ஆண்டுக்குள் படையில் சேர்க்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


